கரோனா வைரஸின் மோசமான பாதிப்பில் நாள்கணக்கிலும், கடந்த ஒரு வாரக் கணக்கிலும் அமெரி்க்கா, பிரேசில் நாடுகளை இந்தியா முறியடித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலான கணக்கெடுப்பில் நாள்தோறும் இந்தியாவில் புதிதாக கரோனாவில் பாதி்க்கப்படுவோர் எண்ணிக்கை அமெரிக்கா, பிரேசிலைவிட அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 7 நாட்களிலும் இரு நாடுகளையும் விட இந்தியாவின் பாதிப்பு அதிகமாகும் என உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் அடிப்படையில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவும், 2-வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. ஆனால், கடந்த 4-ம் தேதி முதல் 10-ம்தேதிவரை புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால் உலகளவில் 23 சதவீதத்துக்கும் அதிகமான கரோனா நோயாளிகளும், 15 சதவீதத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளும் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.
கடந்த 4 ம் தேதிமுதல் 10 வரை இந்தியாவில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 379 பேர் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டனர், 6 ஆயிரத்து 251 பேர் உயிரிழந்தனர்.
இதேகாலக்கட்டத்தில் அமெரிக்காவில் 3 லட்சத்து 69 ஆயிரத்து 575 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டதனர், 7,232 பேர் உயிரிழந்தனர். பிரேசிலில் 3 லட்சத்து 4ஆயிரத்து 535 பேர் கரோனாவில் புதிதாக பாதிக்கப்பட்டனர், 6ஆயிரத்து 914 பேர் உயிரிழந்தனர்.
இந்த 4-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை இந்தியாவில் தொடர்ந்து நான்கு நாட்கள் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் புதிதாகப் பாதிக்கப்பட்டனர், ஒரு நாள் மட்டும் 52 ஆயிரமாகக் குறைந்தது.
கடந்த 10-ம் தேதி இந்தியாவில் 62,064 பேர் பாதிக்கப்பட்டனர், அமெரிக்காவில் 53,893 பேரும், பிரேசிலில் 49,970 பேரும் பாதி்க்கப்பட்டனர்.
கடந்த 9-ம் தேதி இந்தியாவில் 64,399 பேரும், அமெரிக்காவில் 61,028 பேரும், பிரேசிலில் 50,230 பேரும் புதிதாக கரோனாவில் பாதிக்கப்பட்டனர்
8-ம் தேதி இந்தியாவில் 61,537 பேரும், அமெரிக்காவில் 55,318 பேரும்,பிரேசிலில் 53,139 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகினர்.
7-ம் தேதி இந்தியாவில் 62,538 பேருக்கும், அமெரிக்காவில் 53,373 பேருக்கும், பிரேசிலில் 57,152 பேருக்கும் தொற்று ஏற்பட்டது.
6-ம் தேதி இந்தியாவில் 56,282 பேரும், அமெரிக்காவில் 49,629 பேரும், பிரேசிலில் 51,603 பேரும் பாதிக்கப்பட்டனர்.
5-ம் தேதி இந்தியாவில் 52,509 பேரும், அமெரிக்காவில் 49,151 பேரும், பிரேசிலில் 16,641 பேரும் கரோனாவில் பாதிக்கப்பட்டனர்.
4-ம் தேதி இந்தியாவில் 52,050 பேரும், அமெரிக்காவில் 47,183 பேரும், பிரேசிலில் 25,803 பேரும் புதிதாக கரோனாவில் நோய் தொற்றுக்குஆளாகினர்.
இந்தியாவைப் பொருத்தவரை கரோனா பாதிப்பில் ஒரு லட்சத்தை தொட 110 நாட்கள் எடுத்துக்கொண்டது, ஆனால், 10 லட்சத்தை அடுத்த 59 நாட்களில் எட்டியது, அடுத்த 24 நாட்களில் 10 லட்சத்தை எட்டி 20 லட்சமாக அதிகரித்தது.
கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டால், ஏறக்குறைய 70 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர், அதாவது 15.83 லட்சம் பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 சதவீதத்துக்கும் குறைந்து 1.99 சதவீமாக வீழ்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
பரிசோதனை அடிப்படையில் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 18,300 பேருக்கும், அமெரிக்காவில் 1,99,803 பேருக்கும், பிரேசிலில் 62,200 பேருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.
இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago