காங்கிரஸ் தலைமை சமாதானம் செய்ததை தொடர்ந்து 30 நாட்களுக்கு பிறகு ஜெய்ப்பூர் திரும்பிய சச்சின் பைலட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.
காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்தார். ஆளுநர் மிஸ்ரா ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சூழலில் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் தனியே சந்தித்துப் பேசினார்.
» பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடம்: ராணுவ மருத்துவமனை அறிவிப்பு
» கரோனா தொற்று; குணமடையும் விகிதம் 70 சதவீதத்தை நெருங்குகிறது
ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பு சுமுகமான மாற்றத்தை உருவாக்கியது.
ராஜஸ்தான் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை நியமிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்துள்ளார். இதனால் சச்சின் பைலட் கட்சிக்கு மீண்டும் திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்று ஜெய்ப்பூர் திரும்பினார். அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
‘‘நான் கட்சிக்கு எதிராகவும், கட்சித் தலைமைக்கு எதிராகவும் எதுவும் பேசவில்லை. எனக்கு பதவி கேட்டும் போராடவில்லை. நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. ஆனால் என்னை பற்றி பலரும் பலவிதமான புரளியை கிளப்பி விட்டனர். கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக எனது கருத்தை தெரிவித்து அதற்காக எனது குரலை எழுப்பினேன்.’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago