கோவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதவீதத்தை நெருங்குகிறது. இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது.
ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில், பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் கணிசமாக அதிகரித்து இன்று 70 சதவீதத்தை நெருங்கியுள்ளது.
நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவது அதிகரித்திருப்பது, குறைவான தொற்றுள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது ஆகியவற்றின் காரணமாக குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15,83,489-ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47,746 கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 6,39,929 மட்டுமே. இது, கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 28.21 விழுக்காடுதான். இவர்கள், தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து சீராக அதிகரித்து வருவதால் கோவிட்-19 நோயாளிகளைவிட, 9.5 லட்சம் பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றால் இறப்பவர்களின் விகிதமும் உலக சராசரியைவிட இந்தியாவில் குறைவாக இருக்கிறது. இன்று இந்த இறப்பு விகிதம் இரண்டு விழுக்காடாகும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago