கரோனா தொற்றில் இருந்து குணம்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாார் எடியூரப்பா

By செய்திப்பிரிவு

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.

முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய சிலருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கடந்த இரு வாரங்களாக எடியூரப்பா தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் கரோனா இல்லை என்பது தெரியந்வந்தது. ஆனால் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கர்நாடக அமைச்சரவையில் கரோனாவில் பாதிக்கப்படும் 4-வது உறுப்பினர் எடியூரப்பா ஆவார். இதற்கு முன், வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சுற்றுலாத் துறை அமைச்சர் டிசி ரவி, வேளாண்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் ஆகியோர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து, மருத்துவர்கள் ஆலோசனையின்படி, பெங்களூருவில் உள்ள பழைய விமான நிலையம் அருகே இருக்கும் மணிபால் மருத்துவமனையில் எடியூரப்பா ஆகஸ்ட் 2-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எடியூரப்பாவின் மகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் எடியூரப்பா சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டனர்.

ஒருவார சிகிச்சைக்கு பிறகு எடியூரப்பா நன்று உடல்நலம் தேறியுள்ளார். அவருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் நெகட்டிவ் என முடிவுகள் வந்தன. மேலும் நெஞ்சு பகுதியில் இருந்த சளியும் முழுமையாக குறைந்துள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சை முடிந்து இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மருந்துவனைமயில் இருந்து புறப்பட்டபோது அவருக்கு மருத்துவர்கள், ஊழியர்கள் வாழ்த்துக் கூறி வழியனுப்பி வைத்தனர்.

சில நாட்கள் அவர் வீட்டில் தனிமையில் இருப்பார் எனத் தெரிகிறது. வீட்டில் இருந்தபடியே அலுவலக பணிகளை கவனிப்பார் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்