இந்தியாவில் கரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 64 ஆயிரத்து 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 861 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 64 ஆயிரத்து 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 21 லட்சத்து 51 ஆயிரத்து 10 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக கரோனாவில் நாள்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்த நிலையில் இன்று 21 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்து 80 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 53 ஆயிரத்து 879 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தோர் சதவீதம் 68.78 ஆக உயர்ந்துள்ளது, இறப்பு வீதம் 2.01 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 6 லட்சத்து 28 ஆயிரத்து 747 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 861 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 43 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மட்டும் 7 லட்சத்து 19 ஆயிரத்து 364 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 2 கோடியே 41 லட்சத்து 6 ஆயிரத்து 535 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக தமிழகத்தில் 118 பேர், ஆந்திராவில் 97 பேர், கர்நாடகாவில் 93 பேர், மேற்கு வங்கத்தில் 51 பேர், உத்தரப்பிரதேசத்தில் 47 பேர், பஞ்சாப், குஜராத்தில் தலா 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் 16 பேர், அதைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்தில் 15 பேர், பிஹாரில் 13 பேர், தெலங்கானா, ஒடிசாவில் தலா 12 பேர், ராஜஸ்தானில் 11 பேர், ஜம்மு காஷ்மீரில் 10 பேர், அசாமில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஹரியாணாவில் 7 பேர், புதுச்சேரி, உத்தரகாண்டில் தலா 5 பேர், ஜார்க்கண்ட், கேரளா, திரிபுராவில் தலா 4 பேர், சத்தீஸ்கர், கோவாவில் 2 பேர், சண்டிகர், அந்தமான் நிகோரபர், மணிப்பூர், மேகாலயாவில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 275 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 17 ஆயிரத்து 367ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 118 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4,808 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 53 ஆயிரத்து 481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 10 ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,098 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14 ஆயிரத்து 386 பேர் சிகிச்சையில் உள்ளனர். 23 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,628ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 79,773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 93 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3,091 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 12,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago