பிரதமர் நரேந்திர மோடிக்கு 78% பேர் ஆதரவு; மக்களவை தேர்தல் நடந்தால் பாஜக 283 இடங்களில் வெற்றி பெறும்: இந்தியா டுடே குழும ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது சில தளர்வுகளுடன் தொடர்ந்து அமலில் உள்ளது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்தியா டுடே குழுமம்-கார்வி இன்சைட் நிறுவனமும் இணைந்து ‘நாட்டின் இப்போதைய மனநிலை’ என்ற பெயரில் ஓர் ஆய்வை நடத்தின. இதன் முடிவில் கூறியிருப்பதாவது:

இப்போது மக்களவைத் தேர்தல் நடந்தால் ஆளும் பாஜக 283 இடங்களில் வெற்றி பெறும். இது கடந்த ஆண்டு தேர்தலில் வென்றதைவிட 20 இடங்கள் குறைவு என்றாலும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான இடங்களைவிட சற்று கூடுதலாகவே உள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு 49 இடங்களே கிடைக்கும். இது கடந்த தேர்தலில் கிடைத்ததைவிட 3 இடங்கள் குறைவு ஆகும். ஆனால் கடந்த தேர்தலில் 188 இடங்களில் வெற்றி பெற்ற மாநில கட்சிகளுக்கு 23 இடங்கள் கூடுதலாக அதாவது 211 இடங்கள் கிடைக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருப்பதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 78 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். மோடி ஆட்சி மிகவும் மோசம் என வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மேற்கு மாநிலங்களில் மோடிக்கான ஆதரவு தொடர்ந்து அதிக அளவில் உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மோடியின் செல்வாக்கு நடுத்தர அளவிலும் தென் மாநிலங்களில் குறைவாகவும் உள்ளது.

காங்கிரஸுக்கு ராகுல்தான்..

காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதற்கு சிறந்த தலைவராக ராகுல் காந்தி உள்ளார். அவர் தலைவராக வேண்டும் என 23 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கட்சித் தலைவராகலாம் என 18 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு தலா 14 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சோனியா காந்தி இப்போது இடைக்கால தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்