கரோனா தொற்று; மீண்டவர்களின் எண்ணிக்கை 14.2 லட்சத்தைக் கடந்தது

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மொத்த 14.2 லட்சத்தைக் கடந்தது.

மத்திய மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசாங்கங்களின் கட்டுப்பாடு, பரிசோதனை, தனிமைப்படுத்தல், சிகிச்சையில் கவனம் மற்றும் பயனுள்ள முயற்சிகள் ஆகியவை மீட்பு விகிதங்களை அதிகரிப்பதற்கும், இறப்பு விகிதங்கள் சீராக வீழ்ச்சியடைவதற்கும் காரணமாகின்றன.

பயனுள்ள கண்காணிப்பு மற்றும் மேம்பட்ட பரிசோதனை ஆகியவை பரவல் தொற்றால் பாதிக்கப்படுவோரை முன்கூட்டியே கண்டறிவதை உறுதிசெய்துள்ளன, இதன் விளைவாக கடுமையான மற்றும் சிக்கலான நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகுக்கிறது. உலகளவில் ஒப்பிடும் போது, உலகளாவிய சராசரியான ஒரு மில்லியனுக்கு 2425 ஐ விட 1469 ஆக மிகக் குறைந்த எண்ணிக்கையில் இந்தியா உள்ளது.

யூனியன் மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசாங்கங்களால் "பரிசோதித்தல் கண்காணித்தல் சிகிச்சை அளித்தல்" திட்டத்தை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுவது, உலகளாவிய சூழ்நிலையுடன் ஒப்பிடும் போது இறப்பு விகிதம் (CFR) குறைவாக இருப்பதை உறுதிசெய்தது. மேலும், அது தொடர்ந்து படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இறப்பு விகிதம் இன்று 2.04 சதவீதமாக உள்ளது.

கோவிட்-19 காரணமாக இறப்புகளைக் குறைப்பதற்கான கவனம் செலுத்தும் முயற்சிகளுடன், உலக சராசரியான ஒரு மில்லியனுக்கு 91 இறப்புகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு மிகக் குறைந்த இறப்பு 30 ஆக பதிவாகியுள்ளது.

கோவிட்-19 குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,900 நோயாளிகள் குணமடைந்த நிலையில், இந்தியாவில் கோவிட்-19 இலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 14,27,005 ஐ எட்டியுள்ளது. குணமடைந்தோர் விகிதம், சீராக உயர்ந்து, 68.32 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை, இன்று 6,19,088 ஆகும், இது தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர்களில் 29.64 சதவீதம் ஆகும். இவர்கள் மருத்துவமனைகளில் அல்லது வீட்டில் தனிமையில் மருத்துவ மேற்பார்வையில் உள்ளனர்.

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான மொத்தம் 2,33,87,171 மாதிரிகளை இந்தியா பரிசோதித்ததன் விளைவாக நாடு முழுவதும் விரிவாக்கப்பட்ட கண்டறியும் ஆய்வக வலையமைப்பு மற்றும் எளிதான சோதனைக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,98,778 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஒரு மில்லியனுக்கான பரிசோதனை இன்று 16947 ஆக அதிகரித்துள்ளது.

இந்த பரவலான பரிசோதனையின் முக்கிய காரணி கண்டறியும் ஆய்வகங்களின் தொடர்ச்சியாக விரிவடையும் நெட்வொர்க் ஆகும். இந்தியாவில் அரசுத்துறையில் 936 ஆய்வகங்கள் மற்றும் 460 தனியார் ஆய்வகங்கள் என கோவிட் -19 பரிசோதனைக்கு மொத்தம் 1396 ஆய்வகங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

· Real-Time RT PCR அடிப்படையிலான பரிசோதனை ஆய்வகங்கள்: 711 (அரசு: 428 + தனியார்: 283)

· TrueNat அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 574 (அரசு: 476 + தனியார்: 98)

· CBNAAT அடிப்படையிலான சோதனை ஆய்வகங்கள்: 111 (அரசு: 32 + தனியார்: 79)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்