தூய்மை இந்தியா இயக்கம் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் வகையில் டெல்லியில் உருவாக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஸ்வச்சதா கேந்திரா எனும் தேசிய தூய்மை மையத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
மகாத்மா காந்திக்கு அர்ப்பணம் செய்யப்படும் வகையிலான இந்த மையம் குறித்து காந்தியடிகளின் சம்பரன் சத்தியாகிரகப் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் போது, 2017 அன்று, பிரதமர் முதன்முதலாக அறிவித்திருந்தார்.
மக்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும், உலகிலேயே மிகப்பெரிய இயக்கமான தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றிகரமான பயணம் குறித்து இனி வரும் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்த மையங்கள் செயல்படும். இந்த மையங்களில் தூய்மை பற்றிய தகவல்கள், விழிப்புணர்வு, கல்வி, இதர தொடர்புடைய அம்சங்கள் குறித்து டிஜிட்டல் முறையிலான தகவல்களும், இதர வகையிலான தகவல்களும் இடம் பெறும் வகையில் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் தூய்மை இந்தியா இயக்கம் குறித்த காணொலி ஒன்றையும் அவர் பார்வையிட்டார்.
கலந்துரையாடும் வகையில், முக்கிய செய்திகளும், வெற்றிக் கட்டுரைகளும், சிறந்த நடைமுறைகளும் உலக அளவிலான தரங்களும் பற்றிய முழுமையான கற்றல் முறை மூலம் பல்வேறு செயல்பாடுகளும், முறைகளும் கொண்ட கல்வி அனுபவமாக இம்மையம் செயல்படும்.
முதலாவது கூடத்தில் 360 டிகிரி காணொலிக் காட்சி மூலம், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய நடவடிக்கை மாற்ற இயக்கமான தூய்மை இந்தியா இயக்கம் குறித்து, அரங்கிற்கு வருபவர்கள் அனுபவித்து உணரலாம். இரண்டாவது கூடத்தில் எல்இடி பேனல்கள், ஹோலோகிராம் பெட்டிகள், விளையாட்டுகள் மூலமாக தூய்மை இந்தியா குறித்து காந்தி கண்ட கனவை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிந்து கொள்ளலாம். இந்த மையத்திற்கு அருகே திறந்த வெளி அரங்கில் வைக்கப்பட்டுள்ள காட்சிப் படங்களில் சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கி
தூய்மைக்கான போராட்டம் வரையிலான, இந்தியாவின் பயணத்தில் பல நிகழ்ச்சிகள் குறித்து விளக்கப்பட்டிருக்கும் தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றிக்கான அடிப்படை அம்சங்கள் பற்றி, இந்த மையத்தின் சுவர்களில் சுவர் ஓவியங்களும், கலைச் சிற்பங்களும் அழகுற எடுத்துக் கூறும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago