கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 68 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரிப்பது மற்றும் நோயாளிகளின் இறப்பு விகிதம் உலக சராசரியைவிட தொடர்ந்து குறைந்து வருவது ஆகிய இரண்டு குறிப்பிடத்தக்க சாதனைகளுடன், இந்தியா கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலை எதிர்த்து போராடி வருகிறது.
இ்ந்தியாவில் இந்தத் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம், உலக நாடுகளின் சராசரியுடன் ஒப்பிடும் போது, குறைந்த அளவான 2.05 விழுக்காட்டில் உள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 68 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குணமடைவோர் எண்ணிக்கைக்கும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்குமான இடைவெளியும் அதிகரித்துள்ளது. (தற்போது இது 7.7 லட்சமாகும்).
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,769 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 13,78,105 ஆக கூடியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக, ஒரு நாளில் குணமடைவோரின் எண்ணிக்கை சராசரியாக 26,000-லிருந்து 44,000-ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago