இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 20 லட்சத்தைக் கடந்துள்ளது, ஆனால், மோடி தலைமையிலான மத்தியஅரசைக் காணவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்து, 20 லட்சத்து 27 ஆயிரமாக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணி்ககை 13.70 லட்சத்தைக் கடந்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்துவிட்டதைக் குறிப்பிட்டு, ராகுல் காந்தி மத்திய அரசை ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
கடந்தஜூலை 17-ம் தேதி ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டரையும் இன்றைய ட்விட்டர் பதிவில் இணைத்து பதிவிட்டுள்ளார். ஜூலை 17-ம் தேதி பதிவிட்ட ட்விட்டரில் “ இந்தியாவில் இதே வேகத்தில் கரோனா பாதிப்பு சென்றால், வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் 20 லட்சம் பேரை எட்டிவிடும். மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுத்து கரோனா பரவலைத் தடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி கடந்த மாதம் 17-ம் தேதி ட்விட்டரில் பதிவிடும் போது இந்தியாவில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்திருந்தது. அவர் பதிவிட்ட அடுத்த 20 நாட்களில் அடுத்த 10 லட்சத்தை எட்டியுள்ளது.
ராகுல் காந்தி இன்று பதிவிட்ட ட்விட்டரில் “ இந்தியாவில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்துள்ளது. மோடி அரசைக் காணவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago