கரோனா வைரஸ் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 82 நாட்கள் வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி கோயில் ஜீயர்உட்பட 20 அர்ச்சகர்கள், 200-க்கும் மேற்பட்ட தேவஸ்தான ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவியது. இதனால், இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு, ரூ.300 சிறப்பு ஆன்லைன் தரிசன முறை மட்டுமே அமலில் உள்ளது.
தற்போது, திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பணியாற்றி வந்த அர்ச்சகர் ஒருவர், தற்காலிகமாக ஏழுமலையான் கோயிலுக்கு மாற்றப்பட்டார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஆந்திர மாநில எரிபொருள் மற்றும் வனத்துறை அமைச்சர் பாலிநேனி ஸ்ரீநிவாச ரெட்டிக்கு நேற்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago