கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் வரம்புட்குட்பட்ட பகுதிகள், ரங்காரெட்டி, மெட்செல் ஆகிய தெலங்கானா மாநில பகுதிகளில் கரோனா வைரஸ் எண்ணிக்கை அதிகம் எனும் வேளையில் மேலும் 3 மாவட்டங்களான வாரங்கல் நகர், கரீம் நகர், சங்காரெட்டி ஆகிய மாவடட்டங்களிலும் கரோனா பாதிப்பு திடீரென எகிறியுள்ளது.
ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை கிரேட்டர் ஹைதராபாத்தில் 3,398 பாசிட்டிவ் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. ரங்காரெட்டியில் 1284, மேத்சல்-மல்காஜ்கிரியில் 1019 நோய் தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.
இதே காலக்கட்டத்தில் வாரங்கல் நகரில் 744, கரீம் நகரில் 610, சங்காரெட்டியில் சுமார் 500 பேர் பாதிக்கப்பட்டனர்.
கரோனா வைரஸ் எகிறியதற்குக் காரணம் டெஸ்ட்டிங் அதிகம் செய்யப்பட்டதால் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது.
தெலங்கானாவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரைவுகதி ஆண்டிஜென் டெஸ்ட்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று மாநில சுகாதாரத்துறை கூறினாலும் ஒருநாளில் எத்தனை கரோனா சோதனைகள் நடத்தப்படுகின்றன.
இதுவரை எத்தனை டெஸ்ட்கள் மொத்தமாக எடுக்கப்பட்டுள்ளன, மாவட்டவாரியான டெஸ்ட்கள் விவரங்களை தனித்தனியாக தெலாங்கானா அரசு வெளியிடுவதில்லை.
இப்படிப் பிரித்துக் கொடுத்தால்தான் பரிசோதனைகள் எத்தனை, எவ்வளவு சாம்பிள்கள் சோதிக்கப்படுகின்றன, பரவல் விகிதம் ஆகியவற்றைக் கணக்கிட முடியும்.
ஆரம்பத்தில் ஹைதராபாத் அரசு மருத்துவமனைகளில் மட்டும் கரோனா சிகிச்சை அனுமதிக்கப்பட்டது போக இப்போது மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்றால் கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என்றுதானே அர்த்தம் என்கின்றனர் மருத்துவ வட்டார ஆர்வலர்கள்.
முக்கிய செய்திகள்
இந்தியா
33 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago