ராம ராஜ்ஜியக் கொள்கைகளுக்கு சான்றாகவும், நவீன இந்தியாவின் அடையாளமாகவும் ராமர் கோயில் இருக்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று நடைபெற்றது. அப்போது வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். சட்டத்துக்கு இணங்க கட்டமைக்கப்பட்டிருப்பதால், இது இந்தியாவின் சமூக நல்லிணக்க உணர்வையும் மக்களின் வைராக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது. ராமர் கோயில் வளாகம், ராம ராஜ்ஜிய கொள்கைகளின் அடிப்படையில், நவீன இந்தியாவின் அடையாளமாக மாறும்" என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago