குணமடைந்தார் சிவராஜ் சிங் சவுகான்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்ததை தொடர்ந்து இன்று வீடு திரும்பினார்.

மத்தியப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். கரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய காலத்தில் மத்தியப்பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டுமே இருந்தார், அவரின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யபப்படாமல் இருந்தது.

இதனால் கரோனா தடுப்பு பணிகளைக் கண்காணிப்பதில் பெரும் இடையூறும், சிரமங்களும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு ஏற்பட்டது. அதன்பின் பாஜக தலைமையின் அனுமதிபெற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதனால் தொடக்கத்தில் கரோனா நோய் தொற்று விரைவாக அதிகரித்த நிலையில் அதன்பின் எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கையால் படிப்படியாகக் குறைந்தது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் அரவிந்த்சிங் பகதூரியாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் சிவராச் சிங் சவுகானுடன், அரவிந்த் சிங் பங்கேற்றிருந்ததால் உடனடியாக சிவராஜ் சிங்குக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து போபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றார். இந்தநிலையில் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்ததை தொடர்ந்து இன்று வீடு திரும்பினார். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 11 நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வீடு திரும்பினாலும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

23 mins ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்