முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான அஸ்வனி குமார் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில்,
இந்த மனு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.மோகனா, “இது தொடர்பாக மாநில அரசுகள் ஏற்கெனவே முயற்சி மேற்கொண்டுள்ளன. இது ஒரு எதிர்மறையான பிரச்சினை அல்ல. பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்” என்றார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த வழக்கறிஞர் அஸ்வனி குமார், “இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை அவசியம்” என்றார். பாரபட்சமின்றி முதியோருக்கும் கரோனா சிகிச்சை கோரிய மற்றொரு மனுவையும் நீதிபதிகள் விசாரித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “நாடு முழுவதிலும் முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். மேலும் கரோனா பாதுகாப்பு கவச உடைகள் (பிபிஇ கிட்), கிருமி நாசினி மற்றும் முகக் கவசங்கள் வழங்க வேண்டும். முதியோரிடம் இருந்து வரும் கோரிக்கைகளுக்கு அரசு நிர்வாகம் காது கொடுக்க வேண்டும். முதியோர் விவகாரத்தில் கடந்த 2018 டிசம்பரில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தற்போதைய தொற்று நோய் காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். இது தொடர்பாக மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago