கர்நாடகா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவர்கள் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து 71 வயதான சித்தராமையா தன்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் சுயதனிமையில் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சித்தராமையா இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு கோவிட்-19 வைரஸ் தொற்றியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக மருத்துவர்கள் ஆலோசனையின் படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவக்ரள் அனைவரும் கரோனா டெஸ்ட் எடுத்துக் கொண்டு சுயதனிமையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
சித்தராமையாவின் மகன் டாக்டர் யதீந்திர சித்தராமையா, திங்கள் முதல் தன் தந்தைக்கு காய்ச்சல் இருந்து வந்தது என்றும் இதனால் திங்கள் இரவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் கூறினார், “ஆண்டிஜென் சோதனைக்குப் பிறகு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது” என்றார்.
» தெலங்கானா மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கரோனாவினால் மரணம்- பழங்குடியினருக்காகப் போராடியவர்
» பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டதால் கொச்சி விமான நிலையத்தில் வடை ரூ.15, காபி ரூ.20-க்கு விற்பனை
முதல்வர் எடியூரப்பா அனுமதிக்கப்பட்டு கரோனா சிகிச்சைப் பெற்று வரும் மனிப்பால் மருத்துவமனையிலேயே சித்தராமையாவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிறு இரவு எடியூரப்பா அனுமதிக்கப்பட்டார். இவர் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் கே.சுதாகர், மனிபால் மருத்துவமனை மருத்துவர்களுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் உடல் நிலை இப்போது நன்றாக இருப்பதாகவும் கவலைப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago