ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்குவோரின் எண்ணிக்கை 40 கோடியைக் கடந்துள்ளது. ரூ.1.30 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி பிரதமர் மோடியால் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பு வைக்கத் தேவையில்லை. மத்திய அரசின் நேரடிப் பணப் பலன் பரிமாற்றம், நிதியுதவி மக்களை நேரடியாகச் சென்று சேர வேண்டும், அனைவருக்கும் வங்கிக் கணக்கு தேவை என்ற நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தில் வங்கிக் கணக்கு தொடங்குவோருக்கு ரூபே டெபிட் கார்டு, ஓவர் டிராப்ட் ஆகியவையும் வழங்கப்படும்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு இந்த மாதம் 28-ம் தேதியுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஜன்தன் திட்டத்தில் இதுவரை 40.05 கோடி வங்கி சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ.1.30 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சகத்தின் கீழ் வரும் நிதிச்சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜன்தன் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி, வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு விபத்துக் காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியது.
ஜன்தன் திட்டத்தில் கணக்கு வைத்துள்ளோர் கணக்கில் பணம் இல்லாமலே ரூ.10 ஆயிரம் வரை ஓவர் டிராப்ட் பெறும் வசதி அதிகப்படுத்தப்பட்டது.
எந்த ஒரு வீட்டிலும் வயது வந்தோர் ஒவ்வொருவரும் வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டது. ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களில் 50 சதவீதம் பெண்கள் ஆவர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago