ராஜஸ்தான் அரசை கவிழ்க்க சதி: இடைத்தரகர் குரல் மாதிரி பெற நீதிமன்றம் நாட எஸ்ஓஜி திட்டம்

By செய்திப்பிரிவு

ராஜஸ்தானில் முதல்வர் அசோக்கெலாட்டுக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் பைலட்டின் பதவி பறிக்கப்பட்டது.

இதனிடையே, அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக ஒரு தொலைபேசி உரையாடல் பதிவை காங்கிரஸ் வெளியிட்டது. அதில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர்லால் சர்மாவும் குதிரை பேரம் குறித்து பேசுவதாகவும் இதில் இடைத்தரகராக சஞ்சய் ஜெயின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதன் அடிப்படையில் சஞ்சய் ஜெயின் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து விசாரணை நடத்த ராஜஸ்தான் காவல் துறை சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஓஜி) அமைத்தது. இது தொடர்பான வழக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் கடந்த 31-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜர்படுத்தப்பட்ட சஞ்சய் ஜெயின், குரல் மாதிரியை தர மறுத்துவிட்டதாக விசாரணைக் குழு அதிகாரி அசோக் ரத்தோர்தெரிவித்தார். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அவர் தெரி வித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்