உத்தரப்பிரதேச மாநிலத்தின் தொழிற்கல்வித்துறை அமைச்சர் கமல் ராணி வருண்(வயது62) கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்ைச பலனளிக்காமல் இன்று காலமானார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானாக முதல் அமைச்சர், எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த மாநிலத்தில் கரோனாவுக்கு 36 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 1,677 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் ஊரடங்கு நடவடிக்கைளையும் எடுத்து வருகிறது.
இந்நிலையில் மாநிலத்தின் தொழிற்கல்வித்துறை அமைச்சராகவும், கேபினெட்டில் அங்கம் வகித்த கமல் ராணி வருண் கடந்த மாதம் 18-ம் தேதி கரோனாவில் பாதிக்கப்பட்டார். அவர் லக்னோவில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிவந்த நிலையில் இன்று காலமானார் என்று மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு கட்டாம்பூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கமல் ராணி வருண் கடந்த ஆண்டு அமைச்சராகப் பொறுப்பேற்றார். பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்தல் போன்ற பணிகளில் தீவிரமாக பணியாற்றிவந்தவர் கமல் ராணி என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் கமல் ராணி வருண் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவி்த்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட செய்தியில் “ கேபினெட் அமைச்சர் கமல் ராணி வருண் மறைவுக்கு நான் ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவிக்கிறேன்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பிஜிஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் கமல் ராணி. மக்கள் மத்தியில் புகழ்பெற்ற தலைவராகவும், சமூக சீர்திருத்த தலைவராகவும் ராணி திகழ்ந்தார். அமைச்சராகப் பொறுப்பேற்று மிகவும் திறமையாகச் செயல்பட்டவர் கமல் ராணி” எனத் தெரிவித்துள்ளார்
கரோனாவில் காலமான கமல் ராணி வருண் இரு முறை மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த 1996-97-ல் தொழிலாளர் நல குழுவில் கமல் ராணி இருந்தார். கடந்த 1997-ல் பெண்களுக்கான அதிகாரமளித்தல் குழுவில் இருந்தார். அதன்பின் 1998-ல் மீண்டும் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பல்ேவறு நாடாளமன்ற குழுக்களில் ராணி பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago