இந்தியாவில் கரோனாவிலிருந்து 11 லட்சம் பேர் குணமடைந்தனர்; ஒரே நாளில் 50 ஆயிரம் மீண்டனர்: 17 லட்சத்தைக் கடந்தது நோய் தொற்று

By பிடிஐ

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் கடந்த 24 மணிநேரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர். ஒட்டுமொத்தமாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் புதிதாக 54 ஆயிரத்து 735 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த நோய்தொற்று எண்ணிக்கை 17 லட்சத்து 50 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 4-வது நாளாக நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக கரோனாவால் நோய்தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் 16 லட்சம் வந்த நிலையில் இன்று 17 லட்சத்தைக் கடந்துள்ளது.

கரோனாவிலிருந்து நேற்று ஒரே நாளில் 51 ஆயிரத்து 255 பேர் நாடுமுழுவதும் குணமடைந்தனர் இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 45 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 67 ஆயிரத்து 730 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவில் நேற்று ஒருநாளில் 853 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 37 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 322 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 15 ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 99 பேர் கரோனாவில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 56 ஆயிரத்து 738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 10 ஆயிரத்து 596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 26 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,989 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 14 ஆயிரத்து 300 பேர் சிகிச்சையில் உள்ளனர். 23 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,464 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனாவில் 73,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 98 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2,412 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 10,886 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்