நடிகர் சுஷாந்த் விவகாரத்தை மகாராஷ்டிரா-பிஹார் இடையே உரசல் ஏற்படுத்தப் பயன்படுத்த வேண்டாம்: உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

நடிகர் சுஷாந்த் ஜூன் 14ம் தேதியன்று தன் மும்பை இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார், ஆனால் இது தொடர்பாக பெரிய விவகாரமாகி மும்பை பாலிவுட்டில் வாரிசு அரசியல் உள்ளிட்ட மோதல்கள் சமூகவலைத்தளங்களில் வெடித்துள்ளன.

மேலும் பரபரப்பானது என்னவெனில் சுஷாந்த்தின் தந்தை கேகே சிங் புகாரை அடுத்து ரியா சக்ரவர்த்தி மீது தற்கொலையை தூண்டியது உட்பட பலபிரிவுகளில் எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது.
.
இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மும்பை போலீஸ் துறை திறமை வாய்ந்தது, எனவே சுஷாந்த் விவாகரத்தை வைத்து பிஹாருக்கும் மகாராஷ்டிராவுக்கும் இடையே உரசலை உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:

மும்பை போலீஸ் திறமையற்றவர்கள் கிடையாது. யாருக்காவது ஏதாவது ஆதாரங்கள் கிடைத்தால் அதை எங்களுக்கு அளிக்கலாம், நாங்கள் விசாரித்து குற்றவாளிக்கு தகுந்த தண்டனைப் பெற்றுத்தருவோம். ஆகவே சுஷாந்த் மரண விவகாரத்தை சாக்காக வைத்துக் கொண்டு அரசியல் செய்து பிஹாருக்கும் மகாராஷ்டிராவுக்கும் இடையே உரசல்களை உருவாக்க வேண்டாம்.

இந்த வழக்கில் அரசியலைக் கொண்டு வருவது மிகவும் கீழ்த்தரமான ஒரு செயல், என்றார்.

இந்த வழக்கில் மகாராஷ்டிரா அரசு கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ரியா சக்ரவர்த்தி சுஷாந்த் வழக்கை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்ற வேண்டும் கோரியிருக்கிறார். இதனை எதிர்த்து சுஷாந்த் குடும்பத்தினர், பிஹார் அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது.

தற்போது மகாராஷ்டிரா அரசும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் ரியா மனுமீதான முடிவு எடுக்கக் கூடாது என்று மனு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE