இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்தை நெருங்குகிறது. குணமடைந்தோர் 11 லட்சத்தைத் தொடுகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 57 ஆயிரத்து 118 பேர் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 16 லட்சத்து 95 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், கரோனாவிலிருந்து குணமடைந்து வருவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக 10 லட்சத்து 94 ஆயிரத்து 374 பேர் குணமடைந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. 64.53 சதவீதமாக குணமடைந்தோர் விகிதம் இருக்கிறது.
» 'உ.பி.யில் காட்டாட்சி': குற்றமும் கரோனாவும் கை மீறி போய் விட்டது- பிரியங்கா காந்தி விமர்சனம்
கரோனாவில் சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 65 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக கரோனாவால் புதிதாக 50 ஆயிரத்துக்கும் மேல் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 764 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்து 511 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நேற்று 265 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 97 பேர், கர்நாடகத்தில் 84 பேர், ஆந்திராவில் 68 பேர், மேற்கு வங்கத்தில் 45 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் 43 பேர், டெல்லியில் 27 பேர், குஜராத்தில் 23 பேர், பஞ்சாப்பில் 16 பேர், பிஹார், தெலங்கானாவில் 14 பேர், ஜம்மு காஷ்மீரில் 12 பேர், ராஜஸ்தானில் 11 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் 10 பேர், ஒடிசாவில் 8 பேர், அசாம், ஹரியாணா, உத்தரகாண்டில் தலா 4 பேர், கோவா, ஜார்க்கண்ட், கேரளாவில் தலா 3 பேர், சத்தீஸ்கரில் 2 பேர், அந்தமான் நிகோபர் தீவுகள், மணிப்பூர், புதுச்சேரியில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 265 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 14 ஆயிரத்து 994 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 966 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 97 பேர் கரோனாவில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 57 ஆயிரத்து 968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 10 ஆயிரத்து 705 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,963 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14 ஆயிரத்து 090 பேர் சிகிச்சையில் உள்ளனர். 23 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,441 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனாவில் 72,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 84 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2,314 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 10,517 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago