திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தேச விரோதப் பொருட்கள் கடத்தலா? - விசாரணை நடத்த கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தேச விரோதப் பொருட்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத் தலைநகரமான திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானம் மூலம் கடத்திய ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினர் சந்தீப் நாயர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில் பெரும் அரசியல் புயலை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கை, தற்போது தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவான என்ஐஏ விசாரித்து வருகிறது.

இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக தூதரகபார்சல்கள் என்ற பெயரில் தங்கம்மட்டுமல்லாமல் தேசத்துக்கு எதிரான வகையில் பொதுமக்களைத் தூண்டும் தேச விரோத துண்டுப்பிரசுரங்கள், கையடக்க புத்தகங்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்த விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். கொச்சி என்ஐஏ நீதிமன்றம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் வழக்கு விவரம்தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்குமாறு கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விவர ஆவணங்கள் வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) மூடிய உறையில் வைக்கப்பட்டு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் உள்ள சரக்கு விமான ஏஜென்டுகள் சங்கத்தின் தலைவர் ஹரிராஜிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித் குமார் ஆகியோரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கேரளாவில் நடந்த தங்கக்கடத்தல் மூலமாக திரட்டப்படும்பணம் தீவிரவாத செயல்களுக்குபயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்தத் தகவல்களும் என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்