உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகினார். அப்போது சிகிச்சைக்காக அவர் அடிக்கடி அமெரிக்கா சென்று வந்தார். இந்நிலையில் 2019-ல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகியதால், தற்காலிக தலைவராக சோனியா காந்தி மீண்டும் பொறுப்பேற்றார். கடந்த பிப்ரவரியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இரவு 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். இதய, நுரையீரல் நிபுணர் அரூப் குமார் பாசு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். சோனியா காந்திக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.எஸ். ராணா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago