ராமர் கோயில் பூமிபூஜை குழுவில் உள்ள தீட்சிதர், பணியிலிருக்கும் 16 போலீஸாருக்கு கரோனா பாசிட்டிவ்

By செய்திப்பிரிவு

ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைகளுக்கான சடங்குகள் குழுவில் அங்கம் வகிக்கும் தீட்சிதர் ஒருவருக்கும், அங்கு காவல் பணியிலிருந்த 16 போலீஸாருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா காலம் என்பதால் மொத்தம் 200 பேர் மட்டுமே இந்த பூமி பூஜையில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இதற்காக பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, சுமார் ரூ.300 கோடி பெறுமான நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் ஒன்றுதான் அயோத்தி முழுதும் பெரிய திரைகளில் பூமி பூஜை ஒளிபரப்பப் படுகிறது. மேலும் தீபாவளி போன்று பெரிய தீபத் திருவிழாவாக இதை அனுசரிக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

மேலும் நாட்டில் உள்ள அனைத்துத் துறவிகளும் அன்றைய தினத்தில் தங்கள் மடங்களில் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடத்த அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 5ம் தேதி காலை 11.30 முதல் 12.30 மணி வரை பூஜை நடைபெறுகிறது.

இந்நிலையில் பூமி பூஜையில் அங்கம் வகிக்கும் தீட்சிதர்களில் ஒருவருக்கு கரோனா பாசிட்டிவ் ஆக, பணியிலிருக்கும் 16 போல்லீஸாருக்கும் கரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்