இந்தியாவில் 10 லட்சம் பேர் குணமடைந்தனர்: முதல்முறையாக ஒரேநாளில் கரோனாவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் முதல் முறையாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், 775 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகதாாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 52 ஆயிரத்து 123 பேர் புதிதாக கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 15 லட்சத்து 83 ஆயிரத்து 792 ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்து, 10 லட்சத்து 20 ஆயிரத்து 282 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 64.44 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து28 ஆயிரத்து 242 பேராக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து 7 நாட்களாக நாள்தோறும் 45 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 50 ஆயிரத்துக்கு மேல் நோய் தொற்று அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 775 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 34 ஆயிரத்து 968 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 298 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவில் 92 பேர், தமிழகத்தில் 82 பேர், ஆந்திராவில் 65 பேர், மேற்கு வங்கத்தில் 41 ேபர் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் 33 பேர், டெல்லியில் 26 பேர், பஞ்சாபில் 25 பேர், குஜராதத்ில் 24 பேர், ஜம்மு காஷ்மீரில் 15 பேர், மத்தியப்பிரதேசத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானாவில் 12 பேர், பிஹார், ஜார்கண்டில் தலா 9 பேர், ஹரியாணாவில் 7 பேர், ராஜஸ்தானில் 6 பேர், ஒடிசாவில் 5 பேர், அசாமில் 4 பேர், கோவாவில் 3 பேர், உத்தரகாண்ட் , சத்தீஸ்கரில் தலா இருவர், கேரளா, அந்தமான் நிகோபர் தீவுகளில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் கரோனா பரிசோதனையின் எண்ணிக்கை 1.80 கோடியைக் கடந்துள்ளது. ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, 1,81,90, 382 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 4,46,642 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 298 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 14 ஆயிரத்து 463 ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 463 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 82 பேர் கரோனாவில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3,741 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 57 ஆயிரத்து 490 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

டெல்லியில் 10 ஆயிரத்து 770 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 26 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,907ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்தில் 13 ஆயிரத்து 535 பேர் சிகிச்சையில் உள்ளனர். 24 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,396 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கரோனாவில் 67,456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 92 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2,147 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் 10,364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE