100 கிலோ தங்கம், வெள்ளி குவிந்தது: ராமர் கோயில் கட்ட பணமாக அனுப்ப பக்தர்களுக்கு கோரிக்கை

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜையும் அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 5 வெள்ளி செங்கற்களை எடுத்து கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினருக்கு பக்தர்கள் அனுப்பும் இந்த தங்கம் வெள்ளியை எப்படி பயன்படுத்துவது என்று இன்னும் தெரியாததோடு அவற்றை பாதுகாப்பது குறித்தும் கவலைப்படுகின்றனர். எனவே, பக்தர்கள் தங்கம், வெள்ளியை அனுப்ப வேண்டாம் என்று கோரியுள்ளனர்.

அறக்கட்டளை பொதுச் செயலாளரும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவருமான சம்பத் ராய் கூறுகையில், ‘‘பக்தர்கள் தங்கம், வெள்ளியை அனுப்ப வேண்டாம். ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக ஏற்கெனவே வங்கி கணக்கு விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளோம். அந்தக் கணக்கு மூலம் கோயில் கட்டுவதற்காக பணமாக அனுப்பலாம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்