புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தற்போது அமலில் இருக்கும் கல்விக் கொள்கை 1968-ல் உருவாக்கப்பட்டு, 1992-ல் திருத்தப்பட்டது. தற்போதைய புதிய கல்விக் கொள்கை 2014 தேர்தலில் பாஜகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது.
இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவின் முழுமையான அறிக்கையை, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக் குழு, கடந்த ஆண்டு மே 31-ம் தேதி சமர்ப்பித்தது.
புதிய கல்விக் கொள்கைக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘தேசிய கல்விக் கொள்கை 2020-யை முழுமையாக வரவேற்கிறேன். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கல்வித்துறை சீர்திருத்தம் இது. பல கோடி பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்’’ எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
46 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago