கொல்கத்தா, மும்பை, நொய்டாவில் உயர் செயல்திறன் கோவிட் பரிசோதனை நிலையங்கள்: பிரதமர் மோடி  திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

உயர் செயல்திறன் உள்ள மூன்று கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை மையங்களை பிரதமர் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இவை கொல்கத்தா, மும்பை மற்றும் நொய்டாவில் உள்ள ஐ.சி.எம்.ஆர்.-இன் தேசிய மையங்களில் அமைந்துள்ளன.

இந்த மையங்கள் ஒவ்வொன்றிலும் தினமும் சுமார் 10 ஆயிரம் மருத்துவப் பரிசோதனைகளை செய்யும் அதிநவீன, உயர் தொழில்நுட்ப வசதிகள் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்வதால், நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். அதன் மூலம் நோய் பரவாமல் தடுக்க உதவிகரமாக இருக்கும்.

இந்த மூன்று உயர் செயல்திறன் மிக்க மருத்துவப் பரிசோதனை மையங்கள் ஐசிஎம்ஆர்- தேசிய புற்றுநோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம், நொய்டா; ஐ.சி.எம்.ஆர். கருத்தரிப்பு சிகிச்சை ஆராய்ச்சிக்கான தேசிய மையம், மும்பை; மற்றும் ஐ.சி.எம்.ஆர்.- காலரா மற்றும் குடல்சார்ந்த நோய்கள் சிகிச்சை தேசிய மையம், கொல்கத்தா ஆகியவை தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தும் வசதிகளைக் கொண்டவையாக உள்ளன. பரிசோதனைக்கான நேரத்தை இந்த பரிசோதனை நிலையங்கள் குறைத்துவிடும். ஆய்வக அலுவலர்களுடன் தொடர்பில் இருக்கும் நேரம், மருத்துவ உபகரணங்களின் அருகில் இருக்கும் நேரம் ஆகியவையும் குறைவாகவே

இருக்கும். கோவிட் அல்லாத நோய்களின் பரிசோதனை வசதிகளும் இந்த ஆய்வகங்களில் உள்ளது. எனவே நோய் பரவல் காலம் முடிந்த பிறகு ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி, எச்.ஐ.வி., காசநோய், சி.எம்.வி. பாதிப்பு, பாலியல் நோய்கள், நெய்செரியா, டெங்கு போன்ற நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்