இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் புதிதாக கரோனாவால் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 708 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 49 ஆயிரத்து 9 ஆயிரத்து 31 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த நோய்த்தொற்று எண்ணிக்கை 14 லட்சத்து 35 ஆயிரத்து 453 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த இரு நாட்களில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5-வது நாளாக 45 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் ஆறுதல் அளிக்கும் விதமாக, கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்து, 9 லட்சத்து 17 ஆயிரத்து 568 ஆக உயர்ந்துள்ளது. குணமாகும் சதவீதம் 63.92 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 708 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 13,656 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,827 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,494 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,326 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,372 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 811 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,426 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 621 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 463 ஆகவும், ஹரியாணாவில் 392 ஆகவும், ஆந்திராவில் 1,041 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 1,878 பேரும், பஞ்சாப்பில் 291 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 312 பேரும், பிஹாரில் 244 பேரும், ஒடிசாவில் 130 பேரும், கேரளாவில் 61 பேரும், உத்தரகாண்டில் 63 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 12 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜார்க்கண்டில் 85 பேரும், அசாமில் 79 பேரும், திரிபுராவில் 13 பேரும், மேகாலயாவில் 5 பேரும், நாகாலாந்தில் 4 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும் உயிரிழந்தனர்.
தாதர் நகர் ஹவேலி, டையூ டாமனில் தலா இருவர் உயிரிழந்துள்ளனர். கோவாவில் 5 பேர், புதுச்சேரியில் 40 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 75 ஆயிரத்து 799 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,13,328 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,56,526 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,30,606 பேராக அதிகரித்துள்ளது. 1,14,875 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 55,822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,365 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 35,909 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 27,800 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 66,988 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 58,718 பேரும், ஆந்திராவில் 96,298 பேரும், பஞ்சாப்பில் 13,218 பேரும், தெலங்கானாவில் 54,059 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 17,920 பேர், கர்நாடகாவில் 96,141 பேர், ஹரியாணாவில் 31,332 பேர், பிஹாரில் 39,176 பேர், கேரளாவில் 19,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,300 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 25,389 பேர், சண்டிகரில் 887 பேர், ஜார்க்கண்டில் 8,275 பேர், திரிபுராவில் 3,900 பேர், அசாமில் 32,228 பேர், உத்தரகாண்டில் 5,961 பேர், சத்தீஸ்கரில் 7,450 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 2,176 பேர், லடாக்கில் 1,285 பேர், நாகாலாந்தில் 1,339 பேர், மேகாலயாவில் 702 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹவேலியில் 914 பேர், புதுச்சேரியில் 2,786 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,645 பேர் குணமடைந்தனர்.
மிசோரத்தில் 361 பேர், சிக்கிமில் 545 பேர், மணிப்பூரில் 2,235 பேர், கோவாவில் 4,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 1,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 324 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
35 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago