மாடு வாங்க முடியாமல் விவசா யம் செய்ய கஷ்டப்படும் தங்கள் தந்தைக்கு ஏர் எடுத்து உழுது உதவி செய்த மகள்களுக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் பரிசாக வழங்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட் டத்தில் உள்ள மொஹல்ராஜு பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விவ சாயி நாகேஸ்வர ராவ். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். வெண்ணிலா (20), சந்தனா (18) ஆகிய இரு மகள் களின் படிப்பு செலவுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மதனபள்ளி சென்று அங்கு தேனீர் கடை ஒன்றை அவர் நடத்தி வந்தார்.
இந்நிலையில், கரோனா பாதிப் பால் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதில் அவரால் அக்கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால் நாகேஸ்வர ராவின் குடும்பம் மீண்டும் சொந்த கிராமத்துக்கே திரும்பியது.
அப்போது, கிராமத்தில் பிழைப்பு நடத்த வேர்க்கடலை விதைக்கலாம் எனும் யோசனை நாகேஸ்வர ராவுக்கு தோன்றியது. ஆனால், ஏர் உழ அவரிடம் மாடுகள் இல்லை. இதனால் இனி என்ன செய்வது எனத் தெரியாமல் அவர் விழிபிதுங்கி நின்றார்.
இதனை அறிந்த அவரது 2 மகள்களும், மாடுகளுக்கு பதிலாக தாங்களே ஏர் எடுத்து உழுது தங்கள் தந்தைக்கு உதவி வந்தனர். இதனைப் பார்த்த அந்த கிராமத்தினர், இரண்டு இளம் பெண்கள் ஏர் உழுவதை செல் போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்நிலையில், இந்த வீடியோ வை பார்த்து நெகிழ்ந்து போன பிரபல நடிகர் சோனு சூட், அந்தப் பெண்களை வெகுவாக பாராட்டிய துடன், அவர்களுக்கு டிராக்டரை பரிசாக வழங்கியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago