நமக்குத் தேவை புல்லட் ரயில் அல்ல, எதிர்க்கும் விவசாயிகளுக்குத்தான் எங்கள் ஆதரவு:  உத்தவ் தாக்கரே  திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டம் புல்லட் ரயில் திட்டமாகும், இந்தியாவின் வணிகத்தலைநகர் மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமிடப்பட்டது.

ஆனால் மும்பையிலிருந்து நாக்பூரை இணைக்கும் புல்லட் ரயில் போதுமானது என்கிறார் உத்தவ் தாக்கரே. ஆனால் இப்போது புல்லட் ரயில் திட்டம் பின்னடைவு கண்டுள்ளது என்றார் உத்தவ் தாக்கரே.

சிவசேனாக் கட்சி பத்திரிகையான சாம்னாவுக்கு உத்தவ் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

சிலர் விதர்பா மக்களையும் மகாராஷ்ட்ராவின் பிறபகுதி மக்களையும் வித்தியாசப்படுத்திப் பார்க்கின்றனர். எனவே மும்பை-நாக்பூர் புல்லட் ரயில் இந்த இடைவெளியை போக்கும். சம்ருத்தி மஹாமார்க் போல் மத்திய அரசு தன் புல்லட் ரயில் திட்டத்தை திருத்தினால் இந்த புல்லட் ரயில் திட்டம் அதனுடன் போட்டியிடும்.

புல்லட் ரயில் திட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகளுக்கே சிவசேனா எப்போதும் ஆதரவு அளித்து வந்திருக்கிறது. இப்போது ஆட்சியில் இருக்கின்றோம் எனவே விவசாயிகளுக்காக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம். நானார் சுத்திகரிப்பு திட்டத்திலும் கூட மத்திய அரசு திட்ட ஒப்புதல் அளித்தது, சிலர் நிலம் அளித்தனர். ஆனால் பெரும்பான்மையான மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்தனர். என்ன நடந்தது? நாங்கள் அந்தத் திட்டத்தை ரத்து செய்தோம்.

அதே தான் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கும் நடக்கும்.

நமக்கு புல்லட் ரயில்கள் தேவையில்லை, நான் ஆட்டோரிக்‌ஷாக்களையே ஆதரிக்கிறேன்.

இவ்வாறு அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் உத்தவ் தாக்கரே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்