மாவோயிஸ்ட்களை பிடிக்கச் சென்ற 14 தெலங்கானா போலீஸாருக்கு கரோனா

By செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இவர்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் மாநில போலீஸ் ஆணையர் மகேந்திர ரெட்டி, மாவோயிஸ்ட்கள் நடமாட்டமுள்ள சில மாவட்டங்களில் நேரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, மாவோயிஸ்ட்களை பிடிக்க வாரங்கல் வனப்பகுதியில் ஆயுதப்படை போலீஸார் சில நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீஸார் 14 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. எனவே, போலீஸார் அனைவரையும் திரும்பி வர நேற்று உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மாவோயிஸ்ட்களை பிடிக்கச் சென்ற ஆயுதப்படை போலீஸார் அனைவரும் திரும்பி வந்துவிட்டனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்