இந்த ஆண்டில் அதிகபட்ச அளவாக ராஜஸ்தான் மாநிலத்தில் 234 கிலோ அபின் பறிமுதல்

By செய்திப்பிரிவு

ராஜஸ்தானில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பினர் 234 கிலோ அபின் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் துணை இயக்குநர் கேபிஎஸ் மல்ஹோத்ரா டெல்லியில் கூறியதாவது:

ராஜஸ்தான் மாநிலம் சித்தொர்கார் மாவட்டம், ஷாதி கிராமத்தில் போதைப்பொருள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ஜோத்பூர் மண்டல அதிகாரிகள் குழுவினர் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆர்.லால் என்பவரது வீட்டில் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 233.97 கிலோ அபினை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த எம்.கே.தக்காத் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது நாட்டில் இந்த ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களில் அதிகபட்ச அளவு ஆகும். மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டப்படி உரிமம் பெற்று அபின் பயிரிடுவோர், அதிக லாபம் ஈட்டுவதற்காக சட்டவிரோதமாக கடத்தல்காரர்களுக்கு வழங்கியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடத்தல்காரர்கள் அபினை நாட்டின் பிற பகுதி களுக்கு எடுத்துச் சென்று அதிக விலைக்கு விற்பதுடன் ஹெராயி னாக மாற்றவும் பயன்படுத்துகின்ற னர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்