இந்தியாவின் முதல் கோவிட்-19 வாக்சின்: இன்று எய்ம்ஸில் 5 பேருக்குச்  செலுத்தி சோதனை

By செய்திப்பிரிவு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்-19 வாக்சின் ஆன கோவாக்சின் வெள்ளியன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் 5 தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து தயாரித்த கோவாக்சின் சோதனைக்கு 3,500 பேர் பதிவு செய்துள்ளனர்.

கோவாக்சினின் முதற்கட்டப் பரிசோதனையில் எய்ம்ஸில் ஆரோக்கியமாஅ 100 பேருக்கு செலுத்தி சோதிக்கப்படவுள்ளது. டாக்டர் சஞ்சய் ராய் இந்தத் தகவலை அளித்ததாக ஜாக்ரன் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. டாக்டர் ராய்தான் இந்த மருத்துவப் பரிசோதனையை வழிநடத்துகிறார்.

முதலில் 10 பேருக்கு வாக்சின் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு அதன் பயன் குறித்த அறிக்கையை எதிக்ஸ் கமிட்டி ஆய்வு செய்யும். அதன் பிறகு மற்றவர்களுக்கும் செலுத்தி பரிசோதிக்கப்படவுள்ளது.

இந்த அதிமுக்கிய வாக்சின் சோதனைக்காக பதிவு செய்த 3,500 பேரும் பல்வேறு அளவுகோல்களுக்காக எய்ம்ஸில் பரிசோதிக்கப்படுவார்கள். நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இருதய நோய், கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட 50 வகையான சோதனைகள் வாக்சின் செலுத்தப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்படுகிறது.

அதாவது இவர்கள் வாக்சின் கொடுக்கப்படுவதற்கு முன்பாக முழு ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்படுவது அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்