தனது பிம்பத்தை கட்டமைக்கவே 100% கவனம்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடி மீதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கொள்கைகள் மீதும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அந்த வகையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. இந்த விஷயத்தில் சரியான முடிவை மத்திய பாஜக அரசு எடுக்கவில்லை. அண்டை நாட்டு விவகாரங்களில் தொலைநோக்கு பார்வையை மத்திய அரசு கையாள வேண்டும். சீனாவுடனான பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்திய அரசு மாற்று முறையைக் கையாள வேண்டும்.

ஆனால் அதுபோன்ற எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. பிரதமர் மோடி, தனது பிம்பத்தை கட்டமைப்பதிலேயே 100 சதவீதம் கவனம் செலுத்தி வருகிறார். அவரது புகழ் பாடுவதிலேயே இந்தியாவிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. ஒரு தனி மனிதனின் தோற்றம் என்பது தேசத்தின் தோற்றத்துக்கு பதிலியாக அமையாது.

சீன விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு சரியில்லை. பிரதமருக்கு எதிராக கேள்விகளை எழுப்பி அவரது வேலையை செய்ய வைக்க வேண்டியது எனது பொறுப்பாகும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்