இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 720 பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், ஆயிரத்து 129 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் மூலம் அறிய முடிகிறது.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனா வைரஸ் பாதிப்பு என்பது, 12 லட்சத்து 38 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களில் 11 லட்சத்திலிருந்து 12 லட்சமாக பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஆறுதல் அளிக்கும் அம்சமாக கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 82 ஆயிரத்து 606 ஆக உயர்ந்துள்ளது. 63.18 சதவீதம் பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 4 லட்சத்து 26 ஆயிரத்து 167 பேர் கரோனாவுக்குச் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
கரோனாவிலிருந்து கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 129 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 518 பேரும், மகாராஷ்டிராவில் 280 பேரும் உயிரிழந்துள்ளனர்.
» தமிழகம், கர்நாடகா உள்பட தென் மாநிலங்களில் மட்டும் ஒரேநாளில் 19 ஆயிரத்துக்கும் அதிகமான கரோனா தொற்று
ஆந்திராவில் 65 பேர், கர்நாடகாவில் 55 பேர் , மேற்கு வங்கத்தில் 39 பேர், உத்தரப் பிரதேசத்தில் 34 பேர், டெல்லியில் 29 பேர், குஜராத்தில் 28 பேர், மத்தியப் பிரதேசத்தில் 14 பேர், ஜம்மு காஷ்மீரில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலா 9 பேர், ஹரியாணாவில் 8 பேர், அசாம், பஞ்சாப், ராஜஸ்தானில் தலா 6 பேர், ஒடிசாவில் 5 பேர், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா 2 பேர், கேரளா, புதுச்சேரி, திரிபுரா, சண்டிகரில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 12,556 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,719 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,144 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,224 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,221 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 770 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,263 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 583 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 438 ஆகவும், ஹரியாணாவில் 372 ஆகவும், ஆந்திராவில் 823 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 1,519 பேரும், பஞ்சாப்பில் 269 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 273 பேரும், பிஹாரில் 217 பேரும், ஒடிசாவில் 108 பேரும், கேரளாவில் 45 பேரும், உத்தரகாண்டில் 57 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 64 பேரும், அசாமில் 64 பேரும், திரிபுராவில் 8 பேரும், மேகாலயாவில் 4 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், தாதர் நகர் ஹவேலி, டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர்.
கோவாவில் 28 பேர், புதுச்சேரியில் 30 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,87,769 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,583 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,323 பேராக அதிகரித்துள்ளது. 1,07,650 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 51,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,260 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 32,334 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 28,842 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 55,588 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 49,321 பேரும், ஆந்திராவில் 64,713 பேரும், பஞ்சாப்பில் 11,301 பேரும், தெலங்கானாவில் 49,259 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 15,711 பேர், கர்நாடகாவில் 75,833 பேர், ஹரியாணாவில் 28,186 பேர், பிஹாரில் 30,369 பேர், கேரளாவில் 15,032 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,162 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 19,835 பேர், சண்டிகரில் 793 பேர், ஜார்க்கண்டில் 6,486 பேர், திரிபுராவில் 3,449 பேர், அசாமில் 26,772 பேர், உத்தரகாண்டில் 5,300 பேர், சத்தீஸ்கரில் 5,968 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,725 பேர், லடாக்கில் 1,206 பேர், நாகாலாந்தில் 1,084 பேர், மேகாலயாவில் 514 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹவேலியில் 733 பேர், புதுச்சேரியில் 2,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,369 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 317 பேர், சிக்கிமில் 330 பேர், மணிப்பூரில் 2,060 பேர், கோவாவில் 4,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago