கரோனாவை தடுக்கும் முகக்கவசம், நானோ- சானிடைசர்: எஸ்.என்.போஸ் அறிவியல் மையம்  தயாரிப்பு

By செய்திப்பிரிவு

கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் எஸ்.என்.போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம் முகக்கவசம் மற்றும் நானோ- சானிடைசர் உருவாக்கியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணிவது என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. பெரும்பாலான மக்கள் இதை சரிவர கடைபிடிக்காத காரணத்தால் வைரஸ் பரவல் அதிகரிக்கிறது. சிலர் தாம் வெளியிடும் கரிமில வாயுவையே திரும்ப சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகளும், பிற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.

சுவாசிக்க வசதியாக காற்றை வெளியிடும் வால்வு பொருத்தப்பட்ட சிறப்பு முகக்கவசம் ஒன்றை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி ஆய்வு நிறுவனமான, கொல்கத்தாவில் உள்ள எஸ்.என்.போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம் உருவாக்கி உள்ளது.

கரிமில வாயுவை திரும்ப சுவாசிக்கும் பிரச்சனைக்குத் தீர்வாக இந்த முகக்கவசம் அமைந்துள்ளது. மேலும் இந்த முகக்கவசம் அணிந்து கொண்டே பேசும் போதும் கூட, குரல் தெளிவாக வெளியே கேட்கும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மையம் நானோ-சானிடைசர் ஒன்றையும் உருவாக்கி உள்ளது. சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத்துவதால் தோல் உலர்ந்து போவதை இந்த புதிய சானிடைசர் தடுப்பதுடன் நீண்ட நேரத்திற்கு தூய்மையாகவும் வைத்திருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்