விகாஸ் துபேவின் கதை திரைப்படமாக தயாராகிறது

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரபிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள பிக்ரு கிராமத்தில், தன்னை கைது செய்ய வந்த கான்பூர் போலீஸார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ரவுடி விகாஸ் துபே. கடந்த2-ம் தேதி நள்ளிரவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் 8 போலீஸார் மரணம் அடைந்தனர். இதன் பிறகுதலைமறைவான விகாஸ், மத்தியப்பிரதேச காவல் துறையிடம் சிக்கி அதன் பின்னர் உத்தரபிரதேச போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

இந்நிலையில், விகாஸின் வாழ்க்கை ‘விகாஸ் துபே கான்பூர்வாலா’ என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக வெளியாக உள்ளது. இதற்கு முன்பு இணையதள தொடராகவும் விகாஸின் கதை வெளியாக உள்ளது. இதை பிரபல தயாரிப்பாளர்களான ஆதித்யகாஷ்யாப் மற்றும் அவ்தேஷ் திவாரி ஆகியோர் எடுக்க உள்ளனர். கான்பூரைச் சேர்ந்த கதையாசிரியர்களான மிருதுல், கபில், சுபோத்பாண்டே ஆகியோர் வசனம்எழுத, திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது.

மேலும் இருவர் கைது

இதனிடையே, விகாஸ் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு சேர்த்த பணத்தை பாதுகாப்பதுடன் அவருக்கு அவ்வப்போது ஆயுதங்கள் வழங்கி உதவியதாக ஜெய்வாஜ்பாய், பிரஷாந்த் சுக்லா ஆகிய இருவர் கைதாகி உள்ளனர்.இதில் விகாஸை பிக்ரு சம்பவத்தன்றும் ஜெய் சந்தித்து துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வழங்கியதுடன், பிறகு அவர் தப்பிச் செல்லவாகனங்களை அளித்து உதவியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவரிடம் தனது கோடிக்கணக்கான ரூபாயைவிகாஸ் அளித்து பாதுகாத்துள்ளார். இதில் ஜெய்க்கு உதவியாக பிரஷாந்த் சுக்லா இருந்துள்ளார்.

பிக்ரு சம்பவத்தில் இதுவரை விகாஸ் உள்ளிட்ட 6 பேரை கான்பூர் போலீஸார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 12 பேர்தேடப்பட்டு வருகின்றனர். இவர்களது தலைக்கு தலா ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டு படத்துடன் கான்பூர் கிராமப்பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்