அசாமில் பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலம் வெள்ளத்தில் மிதக் கிறது. இதுவரை 86 பேர் உயிரிழந் துள்ளனர். சுமார் 25 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து பரிதவிக் கின்றனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இதன்காரண மாக பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் வெள்ளம் புகுந்து உயி ரிழப்பையும் பெரும் பொருட்சேதத் தையும் ஏற்படுத்தி வருகிறது. வெள்ள பாதிப்பு பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதி களில் வசித்த மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள னர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள் ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன.
அசாம் மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன. இதில் 30 மாவட் டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 9 மாவட்டங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக உள்ளன. குறிப்பாக, கோல்பரா மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் மட்டும் 4.6 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந் துள்ளனர்.
பார்பெட்டா மாவட்டத்தில் 3.37 லட் சம் பேர், மோரிகோனில் 3.34 லட்சம் பேர், தாப்ரியில் 2.53 லட்சம் பேர், தெற்கு சல்மாராவில் 1.14 லட்சம் பேர், காம்ரபில் 1.14 லட்சம் பேர் வெள்ளத்தின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக அசாம் முழுவதும் 25 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து பரிதவிக்கின்றனர். இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 70 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பயிர்கள் மூழ்கின
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கை யில், ‘மாநிலம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக் கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள் ளனர். 1.09 லட்சம் ஹெக்டேரில் பயி ரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகியுள்ளன.
நதியோரங்களில் சுமார் 204 இடங் களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 73 கிரா மங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 168 பாலங்கள் உடைந் துள்ளன. 1,637 சாலைகளில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்கா, புலிகள் சரணாலயத் தின் 90 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 9 காண்டாமிருகங்கள் உட்பட 116 விலங்குகள் உயிரிழந் துள்ளன.
ஐ.நா. சபை ஆறுதல்
அசாம் வெள்ள சேதம் குறித்து ஐ.நா. சபை பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்பானி துஜாரிக் கூறும்போது, ‘‘இந்தியாவின் அசாம் மாநிலம் மற்றும் நேபாளத்தில் மழை வெள்ளத்தால் 189 பேர் உயிரிழந் துள்ளனர். அவர்களின் குடும்பங் களுக்கு ஐ.நா. சார்பில் ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியா, நேபாளத்தில் சுமார் 40 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் தேவையான உதவிகளை வழங்க ஐ.நா. சபை தயாராக உள்ளது’’ என்று தெரிவித்தார்.
முதல்வர் ஆய்வு
அசாமில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட சிராங், பான்கோய்கோன் மாவட்ட பகுதிகளை அம்மாநில முதல் வர் சர்வானந்த சோனோவால் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மாநில அரசு செய்து வருகிறது. நதியோரங்களில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப் பான இடங்களுக்கு அப்புறப்படுத் தப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா நதியில் அதிகளவு தண்ணீரை அண்டை நாடான பூடான் திறந்துவிடுவதால் அசாமில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படு கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மூலம் பூடான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பிரச் சினைக்கு விரைவில் தீர்வு காணப் படும்’’ என்று தெரிவித்தார்.
தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ள முதல்வர் சர்வானந்த சோனோவால், ‘‘பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடிக்கடி தொடர்புகொண்டு வெள்ள பாதிப்பு நிலவரங்களை கேட் டறிந்து வருகின்றனர். தேவையான உதவிகளை வழங்க பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
கரோனா வைரஸ், எண்ணெய் கிணறு விபத்து, நிலச்சரிவு பிரச் சினைகளை அசாம் அரசு திறமை யாக கையாண்டு வருகிறது. வெள்ள பாதிப்பில் இருந்தும் விரைவில் மீள்வோம்" என்றார்.
வானிலை மையம் எச்சரிக்கை
அசாமில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அந்த மாநில வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அசாம் மட்டுமன்றி பிஹார், மேற்குவங்கத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித் துள்ளது.
அசாம் இப்போதே வெள்ளத்தில் மிதக்கிறது. மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் அந்த மாநில மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago