அயோத்தி ராமர் கோயில்: கருவறை அமையும் பகுதியில் அடிக்கல்லாக  40 கிலோ வெள்ளி செங்கல் 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ம் தேதி திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோயிலின் பிரதான கருவறை அமையும் பகுதியில் 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல் அடிக்கல்லாக பயன்படுத்தப்படவுள்ளது.

கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைகள் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும். ஆகஸ்ட் 5ம் தேதி பகல் 12:13 மணிக்கு பிரதான பூமி பூஜை நடக்கவுள்ளது.

இதற்காக பலதரப்பட்ட பண்டிதர்கள், ஜோதிடர்கள் நேரம் குறித்துக் கொடுத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் கலந்து கொள்வது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டுமானத்தில் கருவறை அமையும் பகுதிக்கான அடிக்கல்லாக 40 கிலோ வெள்ளி செங்கல் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கிடையே ராமர் கோயில் கட்டினால் கரோனா ஒழிந்து விடும் என்று சிலர் நம்புகிறார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவிக்க அதற்கு பாஜகவின் உமாபாரதி, இவர் பிரதமர் மோடிக்கு எதிராக அல்ல ராமருக்கு எதிராகவே கருத்து கூறியதாக பவாரைத் தாக்கியுள்ளார்.

இதற்கிடையே ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்க சிவசேனா தன் முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE