பிரேசில் கோரிக்கைக்கு இணங்க இந்தியாவில் 60 வங்கிக் கணக்குகள் முடக்கம்

By செய்திப்பிரிவு

பிரேசிலில் நிதிமுறைகேடு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் இந்தியாவில் உள்ள 60 வங்கிக் கணக்குகளை முடக்க பிரேசில் அரசு வைத்த கோரிக்கையின் பேரில் இந்திய அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

நிதிமுறைகேடு மற்றும் அன்னியச் செலாவணி முறகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் 60 வங்கிக் கணக்குகள் முடக்க்ப்பட்டதாக அமலாக்கப்பிரிவு த் தெரிவித்துள்லது.

நிதிக்குற்றங்களை தடுக்க இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரேசில் நாட்டவர்களின் 60 வங்கிக்கணக்குகள் முடக்கப்படுகின்றன. இந்த வங்கிக் கணக்குகள் பிரேசிலில் செல்வாக்கு மிக்க சிலருடையதாகும்.

டெல்லி, மும்பையில் உள்ள வங்கிகளில் பிரேசில் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE