இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து எப்போது தயாராகும்?- எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்

By செய்திப்பிரிவு

கரோனாவுக்கு தடுப்பு மருந்து டிசம்பர் அல்லது ஜனவரியில் தான் தயாராகும் என எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது.

கோவாக்ஸின் என்ற பெயரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பு மருந்து கரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தகக்து.

கிளினிக்கல் ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகள் அனைத்தையும் பாதுகாப்பாகவும், நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு இருக்கிறது எனும் பரிசோதனையும் முடித்துள்ள நிலையில், இரு கட்டங்களாக மனிதர்களுக்கு மருந்தைச் செலுத்தி பரிசோதிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்குக் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம், ஐசிஎம்ஆர் ஆகியவை அனுமதி வழங்கின.

இதேபோன்று காடில்லா ஹெல்த்கேர் நிறுவனம் ஒரு மருந்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த இரண்டு தடுப்பு மருந்துகளுமே முறையான ஆய்வுக்குட்படுத்தி விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்தவதற்கு உரிய அனுமதி பெற்றுள்ளன. மருத்துவ சோதனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி உரிய அனுமதி வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பு மருந்து தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்து பார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சமூக மருத்துவ துறையின் தலைவர் சஞ்சய் ராய் கூறியதாவது:
கரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது இவை விலங்குகளுக்கு சோதனை முடிக்கப்பட்டு மனிதர்களுக்கு சோதிக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த சோதனையும் முடிந்தால் மட்டுமே தடுப்பு மருந்து தயாராகும். முழுமையான சோதனை முடிய 6 மாத காலங்கள் ஆகும். தடுப்பு மருந்து டிசம்பர் அல்லது ஜனவரியில் தான் தயாராகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்