ராஜஸ்தானில் ஜனநாயகரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க எடுக்க முயற்சி என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு செய்யும் துரோகம், அதேபோல தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு என்பது தனிமனிதர்களின் சுதந்திரத்தின் மீதாந தாக்குதல் என்று சிவசேனாக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க நடத்தப்பட்ட சதி குறித்தும், சச்சின் பைலட் நீக்கப்பட்டது, பாஜக, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு போன்றவற்றைக் குறித்தும் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கத்தில் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
தொலைப்பேசி உரையாடலை ஒட்டுக்கேட்பது என்பது தனிமனிதர்களின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். அதேபோல, மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை பணத்தைப் பயன்படுத்திக் கவிழ்க்க முயல்வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு செய்யும் துரோகம். இதில் எது பெரிய குற்றம் என்பது ஆய்வு செய்வது என்பது அவசியம்.
பாஜகவுக்கும் , சச்சின் பைலட்வுக்கும் இடையே பணப்பரிமாற்றம் நடக்கும் அளவுக்கு ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் குதிரைப் பேரத்தின் மூலம் ஏராளமான எம்எல்ஏக்களை பணத்தால் விலைக்கு வாங்கி, ராஜஸ்தான் மாநில அரசைக் கவிழ்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சச்சின் பைலட்டின் அநீதிக்கு எதிராக கிளர்ச்சி செய்தார் என்பது உண்மையானது அல்ல என்பதையும், சச்சின் பைலட் மற்றும் பாஜக தலைவர்களுக்கு இடையிலான தொலைபேசி உரையாடலை முதல்வர் அசோக் கெலாட் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளார் என்பது அதிர்ச்சிக்குரியது, உணர்ச்சிவசப்பட வைக்கக்கூடியது.
மத்திய அரசின் அதிகார அழுத்தம், பணம் ஆகியவை சேர்ந்து அசோக் கெலாட் அரசை கவிழ்க்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அதைக் காங்கிரஸ் தடுத்துள்ளது.
ஒருவருடைய தொலைப்பேசியை ஒட்டுக்கேட்பது என்பது தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான தாக்குதல். இது குறித்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
இப்போதுள்ள கேள்வி என்னவென்றால், தொலைப்பேசி உரையாடல்களை ராஜஸ்தான் அரசு ஒட்டுக்கேட்கும் அளவுக்கு தேசத்தில் என்ன அவசரநிலை வந்துள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் அதிக விலைக்கு வாங்க முயற்சியும், பெரும்பான்மையாக இருக்கும் ராஜஸ்தான் அரசை கவிழ்க்கவும் முயற்சிகள் நடந்துள்ளன என்று குற்றம்சாட்டப்படுகிறது.
சச்சின் பைலட்டின் கிளர்ச்சியில் ஒழுக்கத்தைவிட, பணம்தான் வழிநடத்தியுள்ளது. இது வேறு ஒன்றுமில்லை ஊழல். இதனால்தான் அசோக் கெலாட் அரசு மத்திய அமைச்சர் ஷெகாவத் மீது ஆதாரங்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தது.
ஆனால், தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு குறித்தும் பாஜக இதுபோன்ற தீவிரமான குற்றச்சாட்டுக் குறித்தும் பேசத்தயாராக இல்லை. ராஜஸ்தானில் குடியரசுத் தலைவர் ஆட்சி தேவை எனக் கேட்கும் பாஜகவினர், ஏன் ஷெகாவத் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறவில்லை. முதலில் ஷெகாவத் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும், அதன்பின் கெலாட் அரசு மீது பாஜக குற்றம்சாட்டட்டும்.
காங்கிரசுக்குள் உட்கட்சிக் குழப்பங்கள் என்பது முடிவடையாதவை., ராகுல் காந்தியை வெற்றிபெற விடக்கூடாது என்பது போல சில நபர்களால் தூண்டப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் இதேபோன்ற உட்கட்சிக் குழப்பத்தால் ஆட்சியை காங்கிரஸ் இழந்தது, ஆனால், ராஜஸ்தானில்அவ்வாறு நடக்கும் போது கடைசி நேரத்தில் விழித்து ஆட்சியைக் காப்பாற்றியது.
ராஜஸ்தான் தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு பல விஷயத்தை அம்பலப்படுத்தும். காங்கிரஸ் தலைவர்களிடையே நடக்கும் உரையாடலை யாராவது ரகசியமாகக் கேட்டு அந்த உரையாடலை ராகுல் காந்திக்கு எடுத்துச் சென்றால் நிறைய அதிர்ச்சியான உண்மைகள் வெளியாகும். ராகுல் காந்தியை சரியாக வேலை செய்ய விடாமல் இருக்க எந்த விலை கொடுக்கவும் சிலர் தயாராக இருக்கிறார்கள். இது முழு எதிர்க்கட்சியையும் பாதிக்கிறது
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago