இந்தியாவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் 7 லட்சமாக உயர்வு; பாதிப்பு 11 லட்சத்தைக் கடந்தது; ஒரே நாளில் 40 ஆயிரம் பேருக்கு பாஸிட்டிவ்: உயிரிழப்பு 27 ஆயிரமாக அதிகரிப்பு

By பிடிஐ

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 40 ஆயிரத்து 425 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கரோனா பாதிப்பு 11 லட்சத்தையும், உயிரிழப்பு 27 ஆயிரத்தையும் கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 11 லட்சத்து 18 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 நாட்களில் 10 லட்சத்திலிருந்து 11 லட்சத்தை அடைந்துள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 86 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 90 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனாவில் 681 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 27 ஆயிரத்து 497 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 11,854 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,628 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2,481 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,142 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,112 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 721 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,146 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 559 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 415 ஆகவும், ஹரியாணாவில் 349 ஆகவும், ஆந்திராவில் 642 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 1,331 பேரும், பஞ்சாப்பில் 254 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 244 பேரும், பிஹாரில் 217 பேரும், ஒடிசாவில் 91 பேரும், கேரளாவில் 42 பேரும், உத்தரகாண்டில் 52 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 46 பேரும், அசாமில் 57 பேரும், திரிபுராவில் 5 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், மேகாலயா, தாதர் நகர் ஹவேலி, டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 28 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,569 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 693 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,17,915 ஆகவும் அதிகரித்துள்ளது.

டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,22,793 பேராக அதிகரித்துள்ளது. 1,03,114 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 48,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,901 பேர் குணமடைந்தனர்.

ராஜஸ்தானில் 29,434 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 22,600 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 49,247 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 42,487 பேரும், ஆந்திராவில் 49,650 பேரும், பஞ்சாப்பில் 10,100 பேரும், தெலங்கானாவில் 45,076 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 13,899 பேர், கர்நாடகாவில் 63,792 பேர், ஹரியாணாவில் 26,164 பேர், பிஹாரில் 26,569 பேர், கேரளாவில் 12,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,371 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 17,437 பேர், சண்டிகரில் 717 பேர், ஜார்க்கண்டில் 5,535 பேர், திரிபுராவில் 2,878 பேர், அசாமில் 23,999 பேர், உத்தரகாண்டில் 4,515 பேர், சத்தீஸ்கரில் 5,407 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,483 பேர், லடாக்கில் 1,178 பேர், நாகாலாந்தில் 988 பேர், மேகாலயாவில் 450 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹவேலியில் 6,052 பேர், புதுச்சேரியில் 1,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,154 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 284 பேர், சிக்கிமில் 283 பேர், மணிப்பூரில் 1,911 பேர், கோவாவில் 3,657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்