அவர்கள் அழைப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை, ராமர் கடவுளுடன் எங்களுடைய உறவு நேரடியானது: சிவசேனா எம்.பி. சூடு

By ஏஎன்ஐ

சிவசேனா கட்சியின் தெற்கு மும்பை எம்.பி. அரவிந்த் சாவந்த் தங்கள் கட்சித் தொண்டர்களை ராமர் கோயில் பூமிபூஜை விழாவுக்கு அழைக்காதது பற்றி கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் பூமிபூஜைக்கான விஷயங்கள் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளன, பிரதமர் மோடிக்கு நேரில் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் கலந்து கொள்வது பற்றி இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி. அரவிந்த் சாவந்த் கூறும்போது, “அவர்கள் எங்களை அழைத்தால் என்ன அழைக்காவிட்டால் என்ன, எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. உத்தவ் தாக்கரே இருமுறை அயோத்திக்குச் சென்றுவந்து விட்டார்.

மசூதியை இடித்த பிறகு பாலா சாகேப் தாக்கரேவும் வன்மையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ராமர் கோயிலுக்காக நாங்கள் எங்கள் பணிகளைச் செய்துள்ளோம். ராமருடன் எங்கள் தொடர்பு நேரடியானது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்