பிஹாரில் தீவிரமாகும் கரோனா; மத்திய குழு விரைகிறது

By செய்திப்பிரிவு

பிஹார் மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆய்வு செய்வதற்காக மத்திய குழு செல்கிறது.

மத்திய அரசு மற்றும் மாநிலங்கள்,யூனியன் பிரதேச அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், கோவிட் தொற்றை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்துள்ளது. மத்திய அரசு தனது சிறப்பு நிபுணர்கள் குழுக்களை மாநிலங்களுக்கு அனுப்பி, தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களை ஆய்வு செய்து வருகின்றது.

இதன் மூலம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது. பிஹார் மாநிலத்தில் கோவிட் மேலாண்மை நடவடிக்கைகளை ஆய்வு செய்து, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும் வகையில் மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. இக்குழுவில், இணைச் செயலர் லாவ் அகர்வால் ( பொது சுகாதாரம்) , மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்; டாக்டர் எஸ்.கே.சிங், இயக்குநர், என்சிடிசி; டாக்டர் நீரஜ் நிக்சல், இணைப் பேராசிரியர் ( மருந்தியல்), எய்ம்ஸ், புதுதில்லி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு நாளை பிஹார் சென்றடையும்.

வீடு, வீடாகச் சென்று ஆய்வு, சுற்றளவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், உரிய நேரத் தொடர்பு கண்டறிதல், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கண்காணிப்பு ஆகிய தரமான கவனிப்பு அணுகுமுறைகள் மூலமாக நோய்க் கட்டுப்பாட்டு உத்திகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தீவிரப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவமனைக் கட்டமைப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், குணமடைதல் உயர்ந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்