கரோனா தொற்று: சிகிச்சையில் 3,58,692 பேர்; குணமடைந்தவர்கள் 6,53,750 பேர்

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்து, 6,53,750 ஆக உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த சரியான சமயத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் தீவிர மற்றும் படிப்படியான உத்திகளுடன் கூடிய, சிறந்த முன்முயற்சிகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்தி வருவதன் பலனாக சிகிச்சை பெறும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்குள் உள்ளது.

இன்றைய நிலையில், நாட்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,58,692 மட்டுமே. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்து, 6,53,750 ஆக உள்ளது. சிகிச்சை பெறுபவர்களுக்கும், குணமடைந்தவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் முன்னேற்றமளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது. இன்று அது, 2,95,058 ஆக உள்ளது. சிகிச்சை பெற்றுவரும், 3,58,692 பேருக்கும் மருத்துவமனைகள் அல்லது வீட்டுத் தனிமைப்படுத்துதலில் சிறப்பு மருத்துவ கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில், 17,994 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் தற்போது 63 சதவீதமாக உள்ளது.ஐசிஎம்ஆரின் தற்போதைய சோதனை உத்தியின் படி, பதிவு பெற்ற அனைத்து மருத்துவர்களும் சோதனைக்குப் பரிந்துரைக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆர்டி-பிசிஆர் சோதனைகள், ரேபிட் ஆன்டிஜன் பாயிண்ட் ஆப் கேர் சோதனைகள், ட்ரூநேட், சிபிஎன்ஏஏடி அடிப்படையிலான பரிசோதனைகள் சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை உயர காரணமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில், 3,61,024 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. மொத்த மாதிரிகள் பரிசோதனை எண்ணிக்கை 1,34,33,742 ஆகும். இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு 9734.6 பேர் வீதம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

குடியிருப்பு வளாகங்களில், குடியிருப்போர் நலச்சங்கங்கள், குடியிருப்போர் சொசைட்டிகள்/ அரசு சாரா அமைப்புகள் சிறிய அளவில் கோவிட் கவனிப்பு வசதிகளைச் செய்து கொள்ளுமாறு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்