உத்திரப்பிரதேச ரவுடி விகாஸ் துபே தலைக்கு ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்ட பரிசை உகந்தவருக்கு அளிக்க அம்மாநில காவல்துறை விரும்புகிறது. இதை யாருக்கு அளிப்பது என முடிவு செய்ய உஜ்ஜைன் மாவட்ட காவல்துறைக்கு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
கான்பூரின் பிக்ரு கிராமத்தில் ஜுலை 2 நள்ளிரவு ரவுடி விகாஸ் துபேயை கைது செய்யச் சென்ற போலீஸாரில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து தலைமறைவான விகாஸ் துபேயை பிடிக்க உ.பி காவல்துறையினரால் அறுபதிற்கும் மேற்பட்ட படைகள் அமைக்கப்பட்டன.
இத்துடன் விகாஸ் தலைக்கு இருந்த ரூ.25,000 பரிசு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஜுலை 9 இல் விகாஸ் துபே ம.பி மாநிலம் உஜ்ஜைனில் சிக்கினார்.
அதே நாளில் உஜ்ஜைன் நீதிமன்ற அனுமதியுடன் ‘டிரான்ஸிட் ரிமாண்ட்’ பெற்று கான்பூர் அழைத்துவரப்பட்ட விகாஸ் துபே மறுநாள் வழியில் தப்ப முயன்றார். அப்போது உபி அதிரடிப்படையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில், விகாஸ் துபே தலைக்கு உபி காவல்துறை அறிவித்த ரூ.5 லட்சம் பரிசுத்தொகை யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக உபி காவல்துறையின் சார்பில் உஜ்ஜைன் மாவட்ட எஸ்பி மனோஜ் குமார் சிங்கிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், உஜ்ஜைன் மாவட்ட காவல்துறை முடிவு செய்யும் நபருக்கு விகாஸ் தலைக்காக அறிவிக்கப்பட்ட பரிசை அளிப்பதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உஜ்ஜைனின் எஸ்பி மனோஜ் குமார் சிங் கூறும்போது, ‘மஹாகாலபைரவர் கோயில் முன்பு காலை 7.45 மணிக்கு பூஜை பொருட்கள் விற்பவர் விகாஸை முதலாவதாக அடையாளம் கண்டு போலீஸுக்கு தகவல் தந்தார்.
கோயிலினுள் தரிசனம் முடித்தவரை அதன் காவலரும் விகாஸிடம் பேசி உறுதிப்படுத்தி தகவல் அளித்தார். இதனால் யாருக்கு ரூ.5 லட்சம் பரிசளிப்பது என்பதை முடிவு செய்ய துணை எஸ்பிக்களான 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.
உஜ்ஜைனில் அமைக்கப்பட்ட குழு அளிக்கும் அறிக்கைக்கு பின் பரிசு பெறுபவர் பற்றி கான்பூர் மாவட்ட காவல்துறை மூத்த கண்காணிப்பாளரும் தமிழருமான பி.தினேஷ்குமாருக்கு தகவல் அளிக்கப்பட உள்ளது. இக்குழுவின் விசாரணையின்படி விகாஸுக்கானப் பரிசு பகிர்ந்தளிக்கவும் வாய்ப்புகள் உள்ளனர்.
இதற்கு முன்பாக விகாஸை தாம் தான் முதலில் அடையாளம் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்ததாக கோயில் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் எனப் பலரும் மனு அளிக்கத் துவங்கி விட்டனர்.
தம் பயணத்திற்கு உதவியதாக விகாஸின் உஜ்ஜைன் நண்பரான ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அளித்த தகவலின்படி விகாஸ், ஜுலை 8 ஆம் தேதி டெல்லிக்கு அருகிலுள்ள ஹரியானாவின் பரீதாபாத்தில் 2 நாள் தங்கியுள்ளார்.
அங்கிருந்து ராஜஸ்தானின் கோட்டாவிற்கு வந்தவர் ஜல்வார் சென்று தனியார் பேருந்தில் உஜ்ஜைன் வந்து சேர்ந்துள்ளார். உஜ்ஜைனுக்கு வரும் நேர்வழி உபியாக இருந்தாலும் அதன் காவல்துறையினரிடம் தப்ப ராஜஸ்தான் வழியை விகாஸ் தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago