இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 34 ஆயிரத்து 884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 671 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் ஒட்டுமொத்தமாக 10 லட்சத்து 38 ஆயிரத்து 716 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரத்து 750 ஆக உயர்ந்து 62.94 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 58 ஆயிரத்து 692 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 3-வது நாளாக நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணிநேரத்தில் 671 பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 26 ஆயிரத்து 273 ஆக அதிகரித்துள்ளது.
» ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப்படையினர் அதிரடி
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக நேற்று 258 பேர் உயிரிழந்தனர். அடுத்ததாக கர்நாடகாவில் 115 பேர், தமிழகத்தில் 19 பேர், ஆந்திராவில் 42 பேர், உத்தரப்பிரதேசத்தில் 38 பேர், மேற்கு வங்கம், டெல்லியில் தலா 26 பேர் உயிரிழந்தனர்.
குஜராத்தில் 17 பேர், ஜம்மு காஷ்மீர், பஞ்சாபில் தலா 9 பேர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் தலா 8 பேர், தெலங்கானாவில் 7 பேர், ஹரியானாவில் 5 பேர், ஜார்கண்ட், பிஹார், ஒடிசாவில் தலா 4 பேர், புதுச்சேரியில் 3 பேர், கோவா, சத்தீஸ்கரில் தலா இருவர் உயிரிழந்தனர்.கேரளா, உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 11,452 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 3,571 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 2,315 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 2,106 ஆகவும், அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 1,049 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 689 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 1,084 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 546 ஆகவும் அதிகரித்துள்ளது.
தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 396 ஆகவும், ஹரியாணாவில் 327 ஆகவும், ஆந்திராவில் 534 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 1,147 பேரும், பஞ்சாப்பில் 230 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 231பேரும், பிஹாரில் 201 பேரும், ஒடிசாவில் 79 பேரும், கேரளாவில் 38 பேரும், உத்தரகாண்டில் 50 பேரும், இமாச்சலப் பிரதேசத்தில் 11 பேரும், ஜார்க்கண்டில் 46 பேரும், அசாமில் 51 பேரும், திரிபுராவில் 3 பேரும், அருணாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், மேகாலயா 2, தாத்ரா நாகர்ஹாவேலி, டையூ டாமனில் தலா இருவரும் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் 25 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 92 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,60,357 ஆக உயர்ந்துள்ளது.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,807 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,20,107 பேராக அதிகரித்துள்ளது. 99,301 பேர் குணமடைந்துள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 46,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 32,973 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 27,789 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 21,081 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 45,163 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 38,011 பேரும், ஆந்திராவில் 38,044 பேரும், பஞ்சாப்பில் 9,442 பேரும், தெலங்கானாவில் 41,102 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 12,757பேர், கர்நாடகாவில் 55,115 பேர், ஹரியாணாவில் 24,797 பேர், பிஹாரில் 23,589 பேர், கேரளாவில் 11,066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,995 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 16,110 பேர், சண்டிகரில் 660 பேர், ஜார்க்கண்டில் 4,964 பேர், திரிபுராவில் 2,366 பேர், அசாமில் 20,646 பேர், உத்தரகாண்டில் 4,102 பேர், சத்தீஸ்கரில் 4,732 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 1,417 பேர், லடாக்கில் 1,152 பேர், நாகாலாந்தில் 956பேர், மேகாலயாவில் 403 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாதர் நகர் ஹாவேலியில் 585 பேர், புதுச்சேரியில் 1,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 1,014 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 282 பேர், சிக்கிமில் 266 பேர், மணிப்பூரில் 1800 பேர், கோவாவில் 3,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் 609 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago